• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட சுற்றுலா கருத்திட்டமொன்றுக்காக காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணித் துண்டொன்றை குத்தகைக்கு அளித்தல்
- உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு உல்லாசப் பயணிகளை குறியிலக்காகக் கொண்டு கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட சுற்றுலா கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு Fantasy Land Entertainment (Pvt) Limited கம்பனியானது திட்டமிட்டுள்ளது. இந்த உத்தேச கருத்திட்டத்திற்கு முதலீட்டுச் சபையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இரத்வத்த என்னும் காணியிலிருந்து ஏக்கர் 42 றூட் 01 பேர்ச்சர்ஸ் 1.5 விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை 30 வருட கால குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு உரிய கம்பனியினால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய காணித் துண்டை குறித்த கம்பனிக்கு நீண்டகால அடிப்படையில் வழங்கும் பொருட்டு காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.