• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பரந்தனில் பழைய இரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ள காணியை நீண்டகால குத்தகை அடிப்படையில் வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனிக்கு உடமையாக்கிக் கொள்தல்
- கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள அரசுடமைக் கம்பனியொன்றான வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனியின் பிரதான வர்த்தக பணியாவது குடிநீர் சுத்திகரிப்பு செயற்பாட்டிற்குத் தேவையான திரவ குளோரின் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கு வழங்குவதாகும். இந்த கம்பனி உள்நாட்டில் சோடியம் ஹைட்ரோக்சைட் மற்றும் குளோரின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், பொலிஅலுமினியம் குளோரைட் மற்றும் சோடியம் ஹைபோகுளோரைட் என்பன இந்தக் கருத்திட்டத்தின் துணை உற்பத்திகளாக உற்பத்தி செய்யப்படுவத்றகும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கருத்திட்டத்திற்காக பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் பரந்தனில் பழைய இரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ளதும் 1954 ஆம் ஆண்டிலிருந்து வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனியினால் பயன்படுத்தப்பட்டு வரும் காணியை இந்தக் கம்பனிக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.