• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கு செய்யப்படும் திருத்தங்கள்
- இனம், மதம், மொழி, சாதி, பால் அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்தவொன்று காரணமாகவும் எந்த பிரசைக்கும் ஓரங்கட்டுதல் அல்லது பக்கச்சார்பு காட்டுதல் ஆகாதென அரசியலமைப்பின் 12 ஆம் உறுப்புரையின் மூலம் விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், முஸ்லிம்களின் திருமண மற்றும் விவாகரத்தினை கட்டுப்படுத்தும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படும் அத்தகைய ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளமையினால், இத்தகைய ஏற்பாடுகளை சட்டத்திலிருந்து நீக்கும் தேவை பல்வேறுபட்ட மகளிர் அமைப்புகள், முஸ்லிம் சமூகத்தைச் சேரந்த மற்றும் இஸ்லாமிய சட்டம் தொடர்பிலான கல்விமான்களினால் சுட்டிகாட்டப்பட்டுள்ளது ஆதலால், இலங்கை பிரசைகளின் திருமணம் மற்றும் விவாகரத்தினைக் கட்டுப்படுத்தும் பொது சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் மற்றும் விவாகரத்தினைக் கட்டுப்படுத்தும் மாற்று வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, இஸ்லாம் மதத்தினை பின்பற்றுபவர்கள் திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கு எதிர்பார்ப்பார்களாயின் அவர்களுக்கு குறித்த இந்த கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டுப்படுவதற்கு இயலுமாகும் வகையில் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவை மற்றும் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையிலுள்ள திருமண வழக்கு நடவடிக்கைகள் சம்பந்தமான நடைமுறை விதிகளைத் திருத்தும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.