• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொற்றோலிய வளங்கள் சட்டமூலம்
- இலங்கையில் பொற்றோலிய மற்றும் வாயு அகழ்வு மற்றும் உற்பத்தி தொழிலை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கி 2003 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தை இல்லாதொழித்து புதிய சட்டமொன்றை ஆக்குவதற்கு 2021 சனவரி மாதம் 25 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.