• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் இஸ்ரேல் கலிலீ சர்வதேச முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளல்
- கமத்தொழில் துறையில் விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ அறிவு மற்றும் ஆற்றல்களை பரிமாறிக் கொள்ளல் போன்ற நோக்கத்துடன் இலங்கை ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் இஸ்ரேல் கலிலீ சர்வதேச முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இருதரப்புக்கும் இடையில் உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.