• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் பயன்படுத்தப்பட்டுவரும் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமையை பல்கலைக் கழகத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளல்
- 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 1980 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட இலங்கை திறந்த பல்கலைக் கழகமானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நிருவகிக்கப்படும் 16 தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். ஆரம்ப பட்ட மட்டத்திலிருந்து கலாநிதி பட்டம் வரையிலான 75 கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்திச் செல்லப்படுவதோடு, 2020 ஆம் ஆண்டில் இந்த பல்கலைக்கழகம் சார்பில் 44,600 மாணவர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர். திறந்த மற்றும் தொலைக் கல்வி வழிமுறைகள் ஊடாக உயர் கல்வியினை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் தாபிக்கப்பட்டுள்ள ஒரே உயர் கல்வி நிறுவனமான இந்த பல்கலைக்கழகத்தின் 9 பிராந்திய நிலையங்களும் 19 கல்வி நிலையங்களும் நாடு முழுவதும் தாபிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு முறையான கல்வியினை வழங்கும் பொருட்டு இந்த பிராந்திய நிலையங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் போதுமான பௌதிக வசதிகளை மேலும் விருத்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் குறித்த நிலையங்கள் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான 17 காணித் துண்டுகளை அரசாங்க காணி கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கு உடைமை யாக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.