• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021/2022 பெரும்போகத்தில் நெற் செய்கைக்காக விவசாயிகளே பசளை உற்பத்தி செய்து பயன்படுத்துவதனை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டம்
- 2021/2022 பெரும்போகத்தில் சுமார் 800,000 ஹெக்டயார்கள் நெல் செய்கைக்கான சேதன பசளைத் தேவையை ஈடுசெய்து கொள்வதற்கு கமத்தொழில் அமைச்சினால் வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ் முக்கியமாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலின் மீது விவசாயிகள் தரமான சேதன பசளை உற்பத்தி செய்வதற்கு ஈடுபடுத்துதல், அனுமதி பத்திரமுள்ள உற்பத்தியாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் சேதன பசளையின் அளவினை அதிகரிப்பதற்கும் தேவையான வசதிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக சேதன பசளையை உற்பத்தி செய்து தமது விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹெக்டயார் ஒன்றுக்கு 12,500/- வீதம் ஆகக்கூடுதலாக 02 ஹெக்டயார்களை விஞ்ஞாத வகையில் ஊக்குவிப்பு கொடுப்பனவொன்றை செலுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.