• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரையாண்டு அரசிறை நிலமை பற்றிய அறிக்கை
- 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசாங்க நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்தின் 10 பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் அரையாண்டு அரசிறை நிலமை பற்றிய அறிக்கையானது நிதி அமைச்சரினால் பொது மக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, உரிய நிதியாண்டில் யூன் மாதம் இறுதித் திகதியளவில் வௌியிடப்படுதல் வேண்டும். அதன் பின்னர் இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் அட்டவணைப்படுத்தப்படுதல் வேண்டும். இதற்கிணங்க, 2021 யூன் மாதம் 30 ஆம் திகதியன்று வௌியிடப்பட்டுள்ள 2021 அரையாண்டு அரசிறை நிலமை பற்றிய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.