• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விளையாட்டுத்துறையில் ஒத்துழைப்பினை பலப்படுத்துவதற்காக இலங்கைக்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன் படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
- இலங்கைக்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் விளையாட்டுத்துறையில் ஒத்துழைப்பினை பலப்படுத்துவதற்காக இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மெய்வல்லுநர் போட்டிகள், நீச்சல், ஜிம்நாஸ்டிக்ஸ், கரப்பந்து, பளுதூக்கல், மல்யுத்தம், வாள் சண்டை, காற்பந்து மற்றும் ஸ்கொஸ் போன்ற விளையாட்டுக்களை முதன்மையாகக் கொண்டு சகல விளையாட்டுத்துறைகள் சார்பிலும் போட்டிகளை ஒழுங்கு செய்து, உயர்கல்வி விளையாட்டு நிறுவனங்கள், விளையாட்டு சம்மேளனங்கள் பிற அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கட்டமைப்புகள் என்பவற்றுக்கிடையில் நிகழ்ச்சித்திட்டங்கள், அனுபவங்கள் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்ளவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையினை செய்து கொள்ளும் பொருட்டு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.