• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையை டிஜிட்டல் சுற்றுலா பயணிகளுக்கு சாதகமான பயண முடிவிட மொன்றாக மேம்படுத்துவதற்கு நீண்டகால விசா அனுமதி பத்திர முறையொன்றை அறிமுகப்படுத்துதல்
- வாழ்வாதாரத்தின் பொருட்டு டிஜிட்டல் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகளாக நாடு நாடாகச் சென்று வாழ்க்கையை கொண்டு நடாத்தும் நபர்கள் டிஜிட்டல் சுற்றுலா பயணிகளாக அழைக்கப்படுவர். இத்தகைய சுற்றுலா பயணிகளுக்கு வசதிகளை செய்வது சுற்றுலாத்துறையின் போக்காக அண்மைக்காலத்தில் அதிகரித்து வருகின்றது. டிஜிட்டல் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் சிற்றுண்டிச்சாலைகள், பொது நூலகங்கள் மற்றும் இத்தகைய வேறு இடங்கள் அல்லது பொழுதுபோக்கு வாகனங்களில் இருந்தவாறே இணைய வசதிளுடனான துணைக்கருவிகளைப் பயன்படுத்தி இணைய வழியின் ஊடாக அவர்களுடைய சேவைகளை வழங்குகின்றனர். தொடர்பாடலின் பொருட்டு அதிவேக இணைய வசதிகளிருத்தல், நீண்டகால விசா அனுமதி பத்திரம், இலாபகரமான தங்குமிடங்கள், வருமானங்களுக்கான வரி விலக்களிப்பு போன்ற விடயங்கள் இத்தகைய சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு முக்கியமானவையாகும். டிஜிட்டல் சுற்றுலா பயணிகளை நாட்டின்பால் கவர்வதற்கும், கூடிய காலம் நாட்டில் தங்கியிருப்பதற்கும் அவர்களுக்கு வசதிகளை செய்வதன் மூலம் கூடுதலான அந்நிய செலாவணியை நாட்டிற்கு பெற்றுக் கொள்ளமுடியுமாகும். இதற்கிணங்க, டிஜிட்டல் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக இலங்கை சுற்றுலாத் துறை மேம்பாட்டு பணியகத்தினால் ஊக்குவிப்பு நிகழ்சசித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் டிஜிட்டல் சுற்றுலா பயணிகளுக்காக நீண்டகால (ஒரு வருட காலத்திற்கு) விசா அனுமதி பத்திர முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்குமாக சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.