• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் மின்சார வாகன பாவனையை ஊக்குவித்தல்
- மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைவாக 2020 ஆம் ஆண்டின் இறுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 8 மில்லியன்களை விஞ்சியுள்ளது. இவற்றுள் கணிசமான வாகனங்களின் எண்ணிக்கை 10 வருடங்களைவிட பழமையானவை யாவதோடு, இத்தகைய பழைய வாகனங்கள் உரிய முறையில் பராமரிக்கப் படாமை நச்சு வாயு வௌியேற்றத்திற்கு காரணியாய் அமைந்துள்ளதென இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையில் வளி மாசடைதலுக்கு சுமார் 60 சதவீத பங்களிப்பு மோட்டார் வாகனங்களினால் நிகழ்கின்றமை மொறட்டுவை பல்கலைக்கழகம் உட்பட மேலும் சில நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பணியொன்றாகையினால் மோட்டார் வாகனங்களுக்கும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கையில் மின்சார வாகனங்களின் பாவனையை ஊக்குவிப்பதற்கு திறமுறைத்திட்டமொன்றை தயாரிக்கும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.