• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் யப்பான் மெய்ஜோ பல்கலைக் கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்தல்
- மாணவர் மற்றும் பதவியணி பரிமாறல் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்தல், பொதுவாக அக்கறையுள்ள துறைகளில் கல்வி வௌியீடுகள் மற்றும் கல்விசார் உபகரணங்களைப் பரிமாறிக் கொள்தல், கூட்டாக கல்வி மற்றும் விஞ்ஞான ரீதியிலான செயற்பாடுகளின் கீழ் விரிவுரைகள், செயலமர்வுகள் மற்றும் மாநாடுகளை ஒழுங்குச் செய்தல் போன்ற நோக்கங்களுடன் பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் யப்பான் மெய்ஜோ பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உயர் கல்வி ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றினைச் செய்து கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.