• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் சீனாவின் செண்டு கமத்தொழில் கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்தல்
- இருதரப்புகளுக்கும் இடையில் கல்வி, விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி தொடர்பிலான தரவுகள் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்தல், பதவியணி மற்றும் மாணவர்களைப் பரிமாறிக் கொள்தல், கூட்டு பாடநெறிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல், தேயிலை மற்றும் மூலிகைப் பயிர்கள் தொடர்பில் கூட்டாக ஆராய்ச்சிகளை மேற்கொள்தல் மற்றும் உற்பத்தி செய்தல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் சீனாவின் செண்டு கமத்தொழில் கல்லூரிக்கும் இடையில் ஒத்துழைப்பினை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றினைச் செய்து கொள்வதற்காக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.