• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021 சிறு போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்துதல்
- இந்த சிறு போகத்தில் சுமார் 1,500,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையினால் இந்த அறுவடையிலிருந்து கணிசமான அளவு நெல்லினை கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பின்வருமாறு 2021 சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* நாட்டரிசி நெல் கிலோவொன்று 50/- ரூபா வீதமும் சம்பா அரிசி நெல் கிலோவொன்று 52/- ரூபா வீதமும் கீரி சம்பா அரிசி நெல் கிலோவொன்று 55/- ரூபா வீதமும் உத்தரவாத விலையின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்தல்.

* உத்தரவாத விலைக்கு மேலதிகமாக தரமிக்க நெல்லினை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்யும்போது பதனிடல் மற்றும் போக்குவரத்து என்பன சார்பில் நெல் கிலோவொன்றுக்கு 1.50 ரூபா வீதம் விவசாயிகளுக்கு செலுத்துதல்.

* கஷ்ட பிரதேசங்களிலுள்ள விவசாயிகளிமிருந்து தரமிக்க நெல்லினை விவசாய சங்கங்களிடமிருந்து கொள்வனவு செய்யும் போது உத்தரவாத விலைக்கு மேலதிகமாக பதனிடல் மற்றும் போக்குவரத்து என்பன சார்பில் நெல் கிலோவொன்றுக்கு 1.50 ரூபா வீதம் இந்த கமத்தொழில் அமைப்புகளுக்கு செலுத்துதல்.

* ஈரப்பதன் கொண்ட நெல்லை உலரவைப்பதற்கான வசதிகள் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாய அமைப்புகள் என்பவற்றின் ஊடாக நெல் கொள்வனவு செய்யும் போது ஈரப்பதன் 14 சதவீத்திலிருந்து 22 சதவீதம் வரை நெல் கிலோவொன்றுக்கு 8/- ரூபாவை உத்தரவாத விலையிலிருந்து குறைத்து விவசாயிகளுக்கு செலுத்துவதற்கும் இத்தகைய நெற் தொகைகளை உலர்த்தி தேவைப்பட்ட தரத்தில் தயாரிப்பதற்காக நெல் கிலோவொன்றுக்கு 4/- ரூபாவும் போக்குவரத்துக்கு 2/- ரூபாவும் குறித்த நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் செலுத்துதல்.

* 2021 சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி ஏற்பாட்டினை பொதுத் திறைசேரியின் தலையீட்டில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் / அரசாங்க அதிபர்களுக்கும் அதிகாரத்தினை கையளித்தல்.