• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- COVID - 19 தொற்று நிலைமையின் மத்தியில் உருவான எதிர்பாரா பொருளாதார நிலமை காரணமாக அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் நிதிச் சந்தை மீது ஏற்பட்ட அழுத்தத்தை குறைப்பதற்காக பொருட்களின் இறக்குமதியை வரையறுப்பதற்கு 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் உள்நாட்டு கைத்தொழிலை பாதுகாப்பதற்கும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தொடர்ச்சியாக வசதிகளை செய்யும் பொருட்டும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட சுங்கத்தீர்வை நிர்ணய குழுவின் சிபாரிசு மீது பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* வழங்குநர்களின் கடன் வசதிகளின் மீது இறக்குமதி செய்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ள பொருட்களை வழமையான விதத்தில் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்தல்.

* தெரிவுசெய்யப்பட்ட சில கமத்தொழில் உற்பத்திகள், பிளாஸ்ரிக் பொருட்கள், செரமிக் பொருட்கள், வாகனங்கள் மற்றும் வெட்டுமர உற்பத்திகள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரையறைகளை தொடர்ந்தும் பேணுதல்.

* தேசிய மருந்து ஒழுங்குறுத்தல் அதிகாரசபையின் சிபாரிசின் மீது மாத்திரம் ஒட்சிசன் மற்றும் சுவாச உபகரணங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்தல்.

* இறக்குமதி கட்டுப்பாடு அனுமதிப் பத்திர வழிமுறையின் கீ்ழ் இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் முகக்கவசங்களை சேர்த்தல்.

இதற்கிணங்க, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள 2021 யூன் மாதம் 11 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள 03 ஒழுங்குவிதிகளையும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.