• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விசேட நோக்கங்களுக்காக பல்கலைக்கழகங்களை தாபிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் சேர்க்கும் பொருட்டு 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தை திருத்துதல்
- விசேட நோக்கங்களுக்காக பல்கலைக்கழகங்களைத் தாபிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தை திருத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.