• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய வரி பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதல்
- வௌிப்படுத்தப்படாத வருமானங்கள் மற்றும் சொத்துக்களை வௌிப்படுத்துவதற்கும் முதலீடு செய்வதற்கும் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு அத்தகைய முதலீட்டாளர்களை வரி, தண்டப்பணம் அல்லது வட்டி செலுத்தும் பொறுப்பிலிருந்து அத்துடன் விசாரணைக்கு அல்லது வழக்கு தொடர்வதற்கு உட்படுதல் என்பவற்றிலிருந்து விலக்களித்து 1 சதவீதம் கொண்ட "சுய வௌிப்படுத்தல் மீதான வரியினை" மாத்திரம் செலுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை விதிப்பதற்கு 2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் பொருட்டுத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக 2021 நிதி சட்டத்தை வரைவதற்கு 2021 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.