• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- ஏற்றுமதியாளர்களினால் சமர்ப்பிக்கப்படும் ஏற்றுமதி பெறுமதிகள் இலங்கை சுங்கத்திற்கு சமர்ப்பிக்கப்படும் ஏற்றுமதி தரவுகளுடன் ஒப்பிடுவதற்கு இயலுமாகும் வகையில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய 6 ஆம் 7 ஆம் அட்டவணைகளை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதனை கட்டாயமாக்கி 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்ட கட்டளையானது 2021 மே மாதம 20 ஆம் திகதியிடப்பட்டதும் 2228/33 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானியில் அறிவித்தலொன்று வௌியிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த கட்டளையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.