• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு கோட்டை பல்மாடி வாகன தரிப்பிடம் மற்றும் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- கொழும்பு கோட்டை பல்மாடி வாகன தரிப்பிடம் மற்றும் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டமான மேற்கட்டமைப்பை வடிவமைத்து நிர்மாணிக்கும் பொருட்டு தேசிய ரீதியில் போட்டி கேள்வி நடைமுறையினை பின்பற்றி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஆகக்குறைந்த விலையினை முன்வைத்துள்ள M/s. Tudawe Brothers (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு உரிய ஒப்பந்தத்தை கையளிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.