• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இனங்காணப்பட்ட நீர்ப்பாசன அபிவிருத்தி கருத்திட்டங்கள் சார்பில் காணிகள் சுவீகரிக்கப்படுவதை துரிதப்படுத்துதல்
- காணி கொள்ளல் சட்டத்திற்கு பொருத்தமான திருத்தங்கள் அறிமுகப்படுத்தும் வரை அரசாங்க நோக்கங்களுக்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு நட்டஈடு செலுத்துவதற்காக "காணி சுவீகரித்தல் மற்றும் மீள் குடியமர்த்தல் குழு (LARC)” மற்றும் "காணி சுவீகரித்தல் மற்றும் மீள் குடியமர்த்தல் விசேட குழு (SUPER LARC)” ஆகிய வழிமுறைகளை ஏற்புடைத்தாக்கிக் கொள்ளும் பொருட்டு 2021 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, முன்னுரிமை கருத்திட்டங்களாக இனங்காணப்பட்டுள்ள வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடிநீர் உட்பட நீர்ப்பாசன நீர் விநியோக கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகள் சார்பில் அதன் உரிமையாளர்களுக்கு 'LARC" மற்றும் "SUPER LARC" ஆகிய வழிமுறைகளை பின்பற்றி நட்டஈட்டினை கணிப்பிட்டு, கொடுப்பனவுகளை செய்வதற்காக நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.