• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கொரிய கப்பல் மற்றும் சமுத்திர பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்தல்
- கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிர்வாக பதவியணியை பரிமாறிக் கொள்ளல், மாணவர்களை பரிமாறிக் கொள்ளல், கூட்டு ஆராய்ச்சிகள், விரிவுரை மற்றும் மாநாடுகள் தொடர்பிலான கல்வி சார் ஒத்துழைப்பு, கல்வி தகவல்கள் உட்பட கருவிகள் பரிமாறிக் கொள்ளல் போன்ற ஒத்துழைப்பு செயற்பாடுகளை ஊக்குவித்து தேசிய கொரிய கப்பல் மற்றும் சமுத்திர பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.