• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நிர்வாக உதவி தொடர்பிலான உடன்படிக்கை
- சுங்கத் தீர்வை மற்றும் ஏனைய வரிகளை செம்மையாக மதிப்பிடுதல், சுங்க நிர்வாகத்தினால் திட்டவட்டமான பொருட்கள் தொடர்பில் தடைச் செய்தல், மட்டுப்படுத்துதல் உட்பட கட்டுபாட்டு நடவடிக்கைகளை உரிய முறையில் அமுல்படுத்துதல், சுங்கத் தவறுகளுக்கு எதிராக சுங்க சட்டத்தினை பயனுள்ள வகையில் அமுல்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நிர்வாக உதவி தொடர்பிலான உடன்படிக்கையினை செய்து கொள்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க உத்தேச உடன்படிக்கையினை இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.