• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மட்டக்களப்பு ஏறாவூர், புன்னைக்குடாவில் புடவை உற்பத்திக்காக தாபிக்கப்படவுள்ள விசேட வலயத்தில் ஆரம்பிக்கப்படும் கருத்திட்டங் களுக்கு 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க திறமுறை அபிவிருத்திக் கருத்திட்ட சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வரி சலுகை வழங்குதல் -
- கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக மட்டக்களப்பு ஏறாவூர், புன்னைக்குடாவில் புடவை உற்பத்திக்கே உரிய விசேட வலயமொன்றைத் தாபிப்பதற்கும் இதனை திறமுறை அபிவிருத்திக் கருத்திட்டமொன்றாக கருதி நடவடிக்கை எடுப்பதற்கும் 2020 ஒக்றோபர் மாதம் 26 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, இந்தச் சட்டத்தின் 3 (2) ஆம் பிரிவின் கீழ் உத்தேச வலயத்தில் தாபிக்கப்படவுள்ள கருத்திட்டங்களுக்கு வழங்கப்படவேண்டிய வரி மற்றும் ஏனைய விலக்களிப்புகள் தொடர்பில் 2021 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க பின்வருமாறு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* உத்தேச புடவை உற்பத்தி வலயத்தை திறமுறை அபிவிருத்திக் கருத்திட்ட சட்டத்தின் 3 (3) ஆம் பிரிவின் கீழ் திறமுறை அபிவிருத்திக் கருத்திட்டமொன்றாக இனங்காணுதல் மற்றும் ஏற்றுக் கொள்தல்.

* இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் உரிய வரி மற்றும் ஏனைய விலக்களிப்புகளை குறித்த வலயத்தில் தாபிக்கப்படும் கருத்திட்டங்களுக்கு ஏற்புடைத்தாக்கிக் கொள்தல்.

* இவ்வாறு வழங்கப்படும் வரி மற்றும் ஏனைய விலக்களிப்புகளை திட்டவட்டமாக குறிப்பிட்டு, திறமுறை அபிவிருத்திக் கருத்திட்ட சட்டத்தின் 3 (4) ஆம் பிரிவின் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தலொன்றை பிரசுரித்தல்.

* இந்த சட்டத்தின் 3 (5) ஆம் பிரிவின் பிரகாரம் இவ்வாறு பிரசுரிக்கப்படும் வரி மற்றும் ஏனைய விலக்களிப்புகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.