• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"மீட்பின் பொருட்டு அனுசரணையான COVID - 19 தடுப்பூசி கருத்திட்டம்" சார்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவி பெற்றுக் கொள்ளல்
- "மீட்பின் பொருட்டு அனுசரணையான COVID - 19 தடுப்பூசி கருத்திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 150 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொகையிலிருந்து 84 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஆசிய பசுபிக் தடுப்பூசி அணுகல் வசதியின் கீழும் மீதி 66 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளங்கல் நிதியத்தின் நிலையான உள்ளூர் நிதி ஏற்பாடுகளின் கீழும் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கருத்திட்டத்தின் மொத்த செலவானது 161.85 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாவதோடு, இலங்கை அரசாங்கத்தினால் 11.85 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ஏற்கப்படவுள்ளது. தடுப்பூசி ஏற்றுவதற்கான செலவுகளை வகித்தல், தடுப்பூசி சார்ந்த மேற்பார்வை முறைமைகளைத் தாபித்தல், குளிரூட்டிகளுடனான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் சிகிச்சை கழிவுப் பொருள் முகாமைத்துவத்தை பலப்படுத்துதல் அடங்கலாக மேலும் சில துணைச் செயற்பாடுகள் சார்பில் இந்த கடன் தொகையை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கு உரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.