• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் விசா வழங்கும் நடவடிக்கைமுறை தொடர்பில் நடைமுறையிலுள்ள விசா வழங்கும் காலத்தை திருத்துவதற்காக குடிவரவு, குடியகல்வு சட்டத்தை திருத்துதல்
- குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் விசா வழங்கும் நடவடிக்கைமுறை தொடர்பில் நடைமுறையிலுள்ள விசா வழங்கும் காலத்தை திருத்துவதற்காக குடிவரவு, குடியகல்வு சட்டத்தை திருத்தும் பொருட்டு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் இதற்கு முன்னர் அமைச்சரவைக்கு பிரேரிப்பொன்றை முன்வைத்தார். இந்த சட்டமூலம் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து மேலும் செய்யவேண்டிய திருத்தங்கள் இருப்பின் அது பற்றி அமைச்சரவைக்கு விடயங்களை முன்வைக்குமாறு 2021 ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் நீி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிணங்க உரிய தரப்பினர்களுடன் நீதி அமைச்சர் கலந்துரையாடியுள்ளதோடு, உரிய சட்டமூலத்தை அவ்வாறே பாராளுமன்றத்தினால் அங்கீகரிப்பது பொருத்தமானதென அமைச்சரவைக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த சிபாரிசினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, குடிவரவு, குடியகல்வு சட்டத்தை திருத்தும் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் 2021 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.