• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை திருத்துதல்
- நீர்வாழ் உயிரின வளர்ப்பினை ஒழுங்குறுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் முகாமித்தல் என்பன பொருட்டிலான விரிவான அதிகாரங்களை இலங்கை நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் அதிபதிக்கு கிடைக்கும் வகையில் 1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை திருத்துவதற்கு 2017 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, செய்யப்படவேண்டிய திருத்தங்கள் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து சிபாரிசுகளைச் சமர்ப்பிப்ப தற்காக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினால் குறித்த சட்டத்தை திருத்துவ தற்குரியதான பிரேரிப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, இந்த பிரேரிப்புகளுக்கு அமைவாக 1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க தேசிய இலங்கை நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தையும் அதேபோன்று இதற்கு ஒருங்கிணைவாக 2006 ஆம் ஆண்டின் 22 ஆம் சட்டத்தினால் திருத்தப்பட்ட 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீரகவளமூலங்கள் சட்டம் என்பன திருத்தப்பட வேண்டுமெனவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள வரைவினை அடிப்படையாகக் கொண்டு, 1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தையும் 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் , நீரகவளமூலங்கள் சட்டத்தையும் திருத்தும் பொருட்டு கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.