• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் அந்நிய செலாவணி வௌிப்பாய்ச்சல் மீதான சில வரையறைகளை தொடர்ந்தும் நீடித்தல்
- COVID - 19 தொற்று காரணமாக நாட்டின் வௌிநாட்டு ஒதுக்கம் மற்றும் அந்நிய செலாவணி சந்தையில் ஏற்படக்கூடிய மறை பாதிப்புகள் என்பவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சில கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய வௌிவாரி அனுப்பீடுகளை இடைநிறுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஒழுங்குவிதிகளின் செல்லுபடியாகும் காலம் 2021 யூலை மாதம் 01 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளதோடு, அந்நிய செலாவணி சந்தையில் ஏற்படக்கூடிய அனர்த்தத்தினைக் குறைப்பதறகும் நிதி முறைமையின் நிலைபேறான தன்மையைப் பேணுவதற்கும் குறித்த ஒழுங்குவிதிகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்பது இலங்கை மத்திய வங்கியின் கருத்தாகும். இதற்கிணங்க, அந்நிய செலாவணி வௌிப்பாய்ச்சல் மீதான சில வரையறைகள் / தடை செய்தல் விதிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை தொடர்ந்தும் 2021 யூலை மாதம் 02 ஆம் திகதியிலிருந்து ஆறு (06) மாத காலத்திற்கு நீடிக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.