• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேவைகளை ஈடுசெய்து கொள்ள முடியாது பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற மத வழிப்பாட்டுத் தலங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குதல்
- நாடுமுழுவதும் காணப்படும் COVID - 19 தொற்று நிலைமை மற்றும் அடிக்கடி விதிக்கப்படும் பயணக் கட்டுப்பாடு காரணமாக அங்கத்தவர்களிடமிருந்து தேவைகளை ஈடுசெய்து கொள்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் மத வழிப்பாட்டுத் தலங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்படும் 5,000/- ரூபா பெறுமதிமிக்க உலர் உணவுப் பொருட்கள் உள்ளடக்கப்பட்ட பொதிகளை இந்த நிறுவனத்தின் விநியோகப் பிரிவின் ஊடாக இனங்காணப்பட்ட விகாரைகள் மற்றும் மத வழிப்பாட்டுத் தலங்களுக்கு விநியோகிக்கும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.