• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
MV X-press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக ஏற்பட்ட கடல் பேரழிவு குறித்து சட்ட செயல்முறைக்கு வசதிகளை வழங்குதல்
- MV X-press Pearl கப்பல் தீ பற்றியமையினால் நிகழ்ந்துள்ள கடல் பேரழிவு குறித்து சட்ட செயல்முறைக்குத் தேவையான வசதிகளை வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் நீதி அமைச்சரினால் உரிய ஏனைய அமைச்சர்களினதும் சட்டமா அதிபரினதும் பங்குபற்றுதலுடன் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறித்த ஆலோசனை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* காப்புறுதி நட்டஈட்டினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தீயினால் ஏற்பட்ட சேதத்தினை மதிப்பிடுவதற்காக ஐந்து உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

* நட்டஈடு கோரிக்கை மற்றும் தகவல் பெற்றுக் கொள்ளல் என்பன பொருட்டு மும்மொழிகளிலும் பத்திரிகை அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

* சட்டமா அதிபரினால் கப்பல் உரிமையாளருக்கு, தலைவருக்கு மற்றும் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

* சமுத்திர உயிரினங்கள் மரணிப்பது தொடர்பிலான தகவல்களை ஆய்வு செய்யும் பொருட்டு வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

* இத்தன்மையிலான விபத்துக்களின் போது செயலாற்றிய அனுபவம் மிக்க சட்ட நிபுணர்களின் சேவையை எதிர்வரும் சட்ட நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமானதென்பதனால் அதன் பொருட்டு பொருத்தமான நிறுவனமொன்றைத் தெரிவு செய்வதற்கு விருப்பத் தெரிவிப்புக்கள் கோரப்பட்டுள்ளதோடு, எட்டு சருவதேச சட்ட நிறுவனங்கள் இதற்கு அவற்றின் விருப்பத்தினை முன்வைத்துள்ளன.

* சட்டமா அதிபரினால் உரிய கப்பலின் காப்புறுதியாளரான லண்டன் P&I Club நிறுவனத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது இடைக்கால நட்டஈடாக 720 மில்லியன் ரூபாவை செலுத்துவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க, நீதி அமைச்சரின் தலைமையில் செயற்பட்டுள்ள ஆலோனை நடவடிக்கைகள் மூலம் எடுக்கப்பட்டுள்ள மேற்போந்த நடவடிக்கைகள் சம்பந்தமாக அதன் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்கும் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களிலிருந்து மிகப் பொருத்தமான நிறுவனத்தை தெரிவு செய்வதற்கு சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காகவும் அங்கீகாரம் வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.