• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மனிதவள அபிவிருத்திக்கான ஜப்பானிய மானிய உதவி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் - 2021
- அரசாங்க துறையின் நிறைவேற்றுத் தரங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு ஜப்பானில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டபின் படிப்பு பாடநெறிகளை கற்பதற்கு ஜப்பான் அரசாங்கத்தினால் "ஜப்பானிய மானிய உதவி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டமானது" 2010 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 180 பட்டபின் படிப்பு பாடநெறிகளுக்கும் 08 கலாநிதி பட்ட பாடநெறிகளுக்கும் தேவையான வசதிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. 2021 செப்ரெம்பர் மாதத்தில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள குழுவுக்கு 271 மில்லியன் ஜப்பான் யென்கள் (அண்ணளவாக 488 மில்லியன் ரூபா) மானியத்தொகையினை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க இந்த மானியத் தொகையை பெற்றுக் கொள்வதற்கான பரிமாற்றல் கடிதங்களை ஜப்பான் அரசாங்கத்துடன் கைச்சாத்திடுவதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கும் நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.