• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'தேசிய வலுசக்தி தினத்தை' பிரகடனப்படுத்தல்
- மின்சக்தி அமைச்சு, வலுசக்தி அமைச்சு, கல்வி அமைச்சு, சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு என்பன இணைந்து நிலைபேறுடைய வலுசக்தி தொடர்பில் பாடசாலை மாணவர்களின் அறிவு, மனப்பாங்கு மற்றும் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்கு பல்வேறுபட்ட செயற்பாடுகளை உள்ளடக்கிய தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றானது திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைவாக SS Helios என்னும் ஜேர்மன் நாட்டு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் மின் விளக்கொன்றினால் வௌியிடப்பட்ட வௌிச்சம் முதற்தடவையாக இலங்கையர்களுக்கு காணக் கிடைத்த திகதியான 1982 யூன் மாதம் 26 ஆம் திகதியினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, வருடாந்தம் யூன் மாம் 26 ஆம் திகதியை 'தேசிய வலுசக்தி தினமாக' பிரகடனப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஆண்டுதோறும் யூன் மாம் 26 ஆம் திகதியை 'தேசிய வலுசக்தி தினமாக' பிரகடனப்படுத்துவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு அறியச் செய்வதற்காக உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தை ஆண்டுதோறும் யூன் மாதம் 26 ஆம் திகதியன்று ஆரம்பித்து அடுத்துவரும் ஆண்டின் யூன் மாதம் 26 ஆம் திகதிவரை நடைமுறைப்படுத்தி தேசிய பரிசளிப்பு விழாவொன்றின் மூலம் முடிப்பதற்குமாக மின்சக்தி அமைச்சரினாலும் வலுசக்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.