• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசளை முகாமைத்துவம் மற்றும் ஒழுங்குறுத்துகையை முறைப்படுத்து வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பை காலத்திற்கேற்ப பலப்படுத்துதல்
- பசளை உற்பத்தி தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விநியோகத்தை முறைப்படுத்துதல் உட்பட இதற்குரிய விடயங்கள் சம்பந்தமான ஏற்பாடுகளை விதித்துரைத்து 1988 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க பசளை ஒழுங்குறுத்துகை சட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . இந்த சட்டத்திலுள்ள சில ஏற்பாடுகள் தற்கால தேவைகளுக்கு போதுமானதாக இல்லாமையினாலும் பொருத்தமற்றமையினாலும் பிரச்சினைகள் எழுந்துள்ளன. முக்கியமாக 'நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' என்னும் அரசாங்க கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக சேதன பசளை பாவனையை நாட்டில் முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையினால் இது சம்பந்தமான ஏற்பாடுகளை சட்டத்தில் சேர்க்கவேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், 1988 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க பசளை ஒழுங்குறுத்துகை சட்டத்திற்குப் பதிலாக தற்கால தேவைகளுக்கு ஏற்ற ஏற்பாடுகளை உள்ளடக்கி புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.