• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தைத் திருத்துதல்
- நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தை திருத்துவதற்கு சட்டமூலமொன்றை தயாரிக்கும் பொருட்டு 2018 செப்ரெம்பர் மாதம் 03 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது இதற்கிணங்க, தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை மேலும் முறைப்படுத்தும் தேவை சட்டமா அதிபரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போதைய தேவைகளுக்கு அமைவாக இந்த சட்டமூலத்தில் மேலும் சேர்க்கவேண்டிய ஏற்பாடுகள் வர்த்தக அமைச்சினால் இனங்காணப்பட்டுள்ளன. இதற்கிணங்க, இனங்காணப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் உள்ளடக்கி சட்டவரைநரைக் கொண்டு குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.