• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பாடல் சட்டத்திற்கான திருத்தங்கள்
- நடைமுறையிலுள்ள 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பாடல் சட்டம் மற்றும் அதற்குரிய திருத்தங்கள் மூலம் தொலைத்தொடர்பாடலை ஒழுங்குறுத்து வதற்குத் தேவையான அதிகாரம் மாத்திரம் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை திருத்துவதற்கு சட்டவரைநர் திணைக்களத்தினால் ஆரம்ப வரைவொன்று தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய தேவைக்கு ஏற்ற விதத்தில் இந்த வரைவினை மேலும் திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1991ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க இலங்கை தொலைத் தொடர்பாடல் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தினை தயாரிக்கும் பொருட்டு தொழிநுட்ப அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.