• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு கைத்தொழிலை பலப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான ஆலோசனைச் சபைகளைத் தாபித்தல்
- வரிசை அமைச்சுக்களுக்கும் ஏனைய உரிய நிறுவனங்களுக்கும் கைத்தொழில் துறை சார்ந்த பிரதிநிதிகளுக்கும் இடையில் முறையான ஒருங்கிணைப்பு இல்லா மையினால் கொள்கை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் செயற் பாடுகளின் போது பிரச்சினைகளும் தேவையற்ற தாமதங்களும் உருவாகுவதற்கு காரணமாய் அமைந்துள்ளது. உரிய தரப்பினருக்கிடையில் ஒருங்கிணைப்பினை பேணும் நோக்கில் 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக கைத்தொழில் தொடர்பிலான ஆலோசனை சபையொன்றைத் தாபிப்பதற்கான வாய்ப்பு இருந்த போதிலும் இதற்கிணங்க இதுவரை தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை கைத்தொழில் துறையின் தற்போதைய தேவைகளுக்குப் பொருத்தமான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டு சட்டத்தை திருத்துவதற்கு ஏற்கனவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த திருத்தங்களை அறிமுகப்படுத்தும் வரை 20 பிரதான கைத்தொழில் துறைகள் சார்பில் இந்த துறைசார்ந்த வர்த்தக சபைகள் / சம்மேளனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் உரிய கைத்தொழில் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனை சபை யொன்றை நியமிக்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.