• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபை பயன்படுத்தி வரும் ஜா-எல, ஏக்கலையில் அமைந்துள்ள குருந்துவத்த என்னும் காணியை இறையிலிக் கொடைப் பத்திரமொன்றின் மூலம் உடைமை மாற்றிக் கொள்தல்
- ஜா-எல பிரதேச செயலாளர் பிரிவின் ஏக்கல, குருந்துவத்தையில் அமைந்துள்ள ஏக்கர் 23 றூட் 01 பேர்ச்சர்ஸ் 16.5 விஸ்தீரணமுடைய ஏக்கல எஸ்டேட் என்னும் காணியின் உரிமையை காணி கொள்ளல் சட்டத்தின் 44 ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை போக்குவரத்து சபைக்கு 2017 ஆம் ஆண்டில் கையளிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை உடைமை மாற்றல் பத்திர மொன்றின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு கையளிக்கப்படவில்லை. அண்ணளவாக 50 வருடங்கள் இலங்கை போக்குவரத்து சபையினால் பயன்படுத்திவரும் இந்த காணியின் ஒரு பகுதியில் தற்போது ஜா-எல போக்குவரத்து டிப்போவின் களஞ்சியமானது நடாத்திச் செல்லப்படுகின்றதோடு, மேலும் சுமார் 17 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியில் அரசாங்கத்திற்கு சொந்தமான வரையறுக்கப்பட்ட லக்திவ பொறியியல் தனியார் கம்பனியின் பேரூந்து உடற்பகுதி தயாரிக்கும் மற்றும் ஏனைய கருத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக் களங்களுக்குச் சொந்தமான சேதமடைந்த வாகனங்களைத் திருத்தும் மற்றும் சேவை செய்யும் நிலையமொன்றை ஆரம்பித்து நடாத்திச் செல்வதற்கு வரையறுக்கப்பட்ட லக்திவ பொறியியல் தனியார் கம்பனியானது திட்டமிட்டுள்ளது. இந்த கருத்திட்டம் அடங்கலாக இலங்கை போக்குவரத்து சபையினதும் வரையறுக்கப்பட்ட லக்திவ பொறியியல் தனியார் கம்பனியினதும் முதலீட்டு நோக்கங்களுக்காக இந்த காணியை பயன்படுத்திக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் இறையிலிக் கொடைப் பத்திரமொன்றின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு உடைமை மாற்றிக் கொள்வதற்கும் அரசாங்க - தனியார் பங்குடமை ஊடாக உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்குமாக போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.