• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் இந்தியாவின் வேலூர் தொழினுட்ப நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- ஆரம்ப பட்ட மற்றும் பட்டபின் படிப்பு பட்ட பாடநெறிகள் சார்பில் மாணவர்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு செய்தல், கற்பித்தல் தொடர்பிலான ஆராய்ச்சிகள் மற்றும் செய்முறை பயிற்சி சம்பந்தமாக பரஸ்பர அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்காக கல்வி பதவியணியினரை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்தல் மற்றும் வௌியீடுகளையும் அறிக்கைகளையும் பரிமாறிக் கொள்ளல் அடங்கலாக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான கூட்டு நிகழ்சசித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்றவற்றின் ஊடாக உயர் கல்வி ஒத்துழைப்பு தொடர்பில் ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் இந்தியாவின் வேலூர் தொழினுட்ப நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.