• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மஹரகம அபேக்‌ஷா வைத்தியாசலைக்கு MRI (1.5T) ஸ்கேன் இயந்திரமொன்றை வழங்குதல்
- மஹரகம அபேக்‌ஷா வைத்தியாசலைக்கு MRI (1.5T) ஸ்கேன் இயந்திரமொன்றை வழங்கி, பொருத்தி, நடைமுறைப்படுத்தி, பராமரிப்பதற்கான பெறுகை தொடர்பில் தேசிய ரீதியில் கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசு மற்றும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசு என்பவற்றின் பிரகாரம் MRI (1.5T) ஸ்கேன் இயந்திரமொன்றை வழங்குவதற்கான கேள்வியை M/s Technomedics International (Pvt) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.