• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேர்பன் மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குதல்
- 2021 யூன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 2022 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிவரையிலான ஒன்பது (09) மாதக் காலப்பகுதிக்கு மேர்பன் மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம் சார்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட வழங்குநர்களிடமிருந்து கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை நைஜிரியாவின் M/s Conscio Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.