• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க நிறுவனங்களுக்குத் தேவையான துணி தேவைகளை உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்தல்
- அங்கீகரிக்கப்பட்ட நியமங்களைக் கொண்டிராத தரம் குறைந்த இறக்குமதிகள் உள்நாட்டுச் சந்தையை ஆக்கிரமித்துள்ளமை மற்றும் மூலப்பொருள் 70 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகின்றமையினால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளமை தற்போது துணி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன. ஆதலால், இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுப்பதற்கு உள்ளூர் துணி உற்பத்தியாளர்களுக்கு இயலுமாகும் வகையில் ஒவ்வொரு மாகாணத்திலும் அரசாங்கத்திற்குத் தேவையான பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு துணிகளை அந்தந்த மாகாணத்திலுள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் இவ்வாறு துணித் தேவைகளை குறித்த மாகாண உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் பிற மாகாணமொன்றிலுள்ள உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் இயலுமாகும் வகையில் ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சரின் சிபாரிசின் பேரில் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.