• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மன்னார் காற்றுசக்தி மின் உற்பத்தி நிலையத்தினை நிர்மாணித்தல்
- திருகோணமலை, மன்னார், மாதம்பை, போலவத்தை மற்றும் கப்பல்துறை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள நெய்யறி துணை நிலையங்கள் சார்பில் 60 மெகாவொட் காற்றுசக்தி ஆற்றலை சேர்க்கும் பொருட்டு 2019 சனவரி மாதம் 29 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்தக் கருத்திட்டத்தின் கீழ் மன்னார் நெய்யறி துணை நிலையம் சார்பில் காற்றுசக்தி மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கும் அனுப்பீட்டு வலையமைப்புடன் இணைப்பதற்கும் சர்வதேச போட்டிக் கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 20 வருட செயற்பாட்டு காலத்தைக் கொண்ட நிர்மாணித்து, செயற்படுத்தி உடைமையாக்கிக் கொள்ளும் அடிப்படையில் காற்றுசக்தி மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கும் மன்னார் நெய்யறி நிலையத்தில் அனுப்பீட்டு வலையமைப்புடன் இணைப்பதற்குமான ஒப்பந்தத்தை Hiruras Power (Pvt) Ltd. நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.