• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு கலந்துரையாடல்களை ஆரம்பித்தல்
- இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரண்டு நாடுகளும் சார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடுகள் உடன்படிக்கை (SAPTA), தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (SAFTA), உலகளாவிய வர்த்தக முன்னுரிமை வழிமுறை (GSTP), ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கை (APTA) மற்றும் உத்தேச பல்துறை தொழிநுட்ப மற்றும் ஒத்துழைப்பு பற்றிய வங்காள விரிகுடா சார்ந்த நாடுகளின் அணுகுகை (BIMSTEC) ஆகிய உடன்படிக்கைகளின் உறுப்பு நாடுகளாக செயலாற்றுகின்றன. ஆயினும் இந்த உடன்படிக்கைகளின் கீழ் விசேட ஏற்பாடுகள் இருக்கின்ற போதிலும் இரு நாடுகளுக்கிடையிலும் நிலவும் வர்த்தகம் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது, மாண்புமிகு பிரதம அமைச்சர் அவர்கள் கடந்த மார்ச் மாதம் பங்களாதேஷுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இரு நாடுகளினதும் பொருளாதார உறவுகளை பலப்படுத்துவதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றை துரிதமாக செய்துகொள்ள வேண்டிய தேவை இரு நாட்டு தலைவர்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று அதன் ஆரம்ப நடவடிக்கையாக குறுகிய பொருள் பட்டியலுடன் முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் சாத்தியம் பற்றி ஆராய்வதற்கும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க பங்களாதேஷுடன் முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்வது சம்பந்தமாக அந் நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.