• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021 திசெம்பர் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதிவரை இலங்கையில் நடாத்தப்படவுள்ள கட்புலனாகா கலாசாசர மரபுரிமைகளை பாதுகாப்பது தொடர்பிலான யுனெஸ்கோ அரசாங்கங்களுக்கு இடையிலான 16 ஆவது குழுக் கூட்டத்திற்கு அனுசரணை வழங்குதல்
- இலங்கை கட்புலனாகா கலாசாசர மரபுரிமைகளை பாதுகாப்பது தொடர்பிலான யுனெஸ்கோ சமவாயத்தின் தரப்பொன்றாவதோடு, தற்போது அதன் அரசாங்கங்களுக்கிடையிலான குழுவின் உறுப்புரிமையைக் கொண்டு செயலாற்றுகின்றது. இந்த அரசாங்கங்களுக்கிடையிலான குழுவின் 16 ஆவது குழுக் கூட்டமானது 2021 திசெம்பர் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதிவரை கொழும்பில் நடாத்துவதற்கான அனுசரணையினை வழங்கும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. உரிய குழுக் கூட்டத்தில் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம், யுனெஸ்கோ செயலகத்தின் 30 பேர்களைக் கொண்ட தூதுக்குழு, 195 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட தூதுக்குழுக்கள், அடங்கலாக சுமார் 1,000 வௌிநாட்டு பிரதிநிதிகள் இந் நாட்டிற்கு வருகை தருவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, கூட்டத்திற்கு அனுசரணை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் பிரகாரம் தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.