• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களின் 2021 முதலாம் காலாண்டின் இறுதியிலான முன்னேற்றம்
- மதிப்பிடப்பட்ட செலவான ஒரு பில்லியன் ரூபாவை விஞ்சிய பாரிய அளவிலான 284 அபிவிருத்தி கருத்திட்டங்கள் 41 அமைச்சுக்களின் கீழ் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதோடு, இந்த கருத்திட்டங்களுக்கு 2021 ஆம் ஆண்டில் 692.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 53 கருத்திட்டங்கள் 'அனைவருக்கும் குடிநீர்' மற்றும் '100,000 கிலோமீற்றர் வீதி வலையமைப்பின் அபிவிருத்தி' போன்ற அரசாங்கத்தின் முக்கிய அபிவிருத்தி குறியிலக்குகளுக்கு உரியதான கருத்திட்டங்களாகும். இந்த கருத்திட்டங்களின் மூலம் திட்டவட்டமான முதலீட்டு குறியிலக்குகளை பூர்த்தி செய்வதற்கு உரிய சகல நிறுவனங்களையும் இணைத்து செயலாற்றும் தேவையையும் சில கருத்திட்டங்களின் செயலாற்றுகைகளுக்கு நேரடி தாக்கத்தை செலுத்தும் காணி சுவீகரித்தல் தொடர்பிலான நடவடிக்கைமுறை மற்றும் சட்ட பிரச்சினைகளைத் துரிதமாக தீர்க்கும் தேவையை சுட்டிக்காட்டி 2021 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டில் இந்த கருத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.