• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 பயணக்கட்டுபாடு நிலவும் காலப்பகுதியில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய முடியாத மரக்கறிகள் மற்றும் பழங்களின் மேலதிக தொகையினை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்து விநியோகித்தல்
- அரசாங்கத்தினால் நாடுதழுவிய ரீதியில் விதிக்கப்பட்ட பயணக்கட்டுபாடு காரணமாக தற்போது தமது உற்பதிகளை முக்கியமாக மரக்கறி மற்றும் பழ வகைகளை இயல்பாக கொண்டு செல்வதற்கும் விற்பனை செய்வதற்கும் இயலாமற் போயுள்ளதனால் அவை பாவனைக்கு உதவாத நிலைக்கு உள்ளாவதன் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாயிகளும் அதேபோன்று பாரிய அளவிலான விவசாயிகளும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றமை தெரியவந்துள்ளது. அத்துடன் நுகர்வோரும் நியாயமான விலையில் வேண்டிய மரக்கறி மற்றும் பழவகைகள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியாத பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர். இதற்கிணங்க, பயணக்கட்டுபாடு அமுலிலுள்ள காலப்பகுதியில் விற்பனை செய்ய முடியாமற் போகும் மரக்கறி மற்றும் பழங்களை மாவட்ட விலை நிர்ணயக் குழுவின் விலைகளில் மாவட்ட செயலாளர்கள் / அரசாங்க அதிபர்கள் ஊடாக கொள்வனவு செய்வதற்கும் இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் மரக்கறி மற்றும் பழங்களை பயணக்கட்டுபாடு முடிவுறும்வரை COVID சிகிச்சை நிலையங்கள், அரசாங்க வைத்தியசாலைகள், முப்படைகள், இடம்பெயர்ந்தோர் தங்குமிடங்கள் மற்றும் வாழ்வாதாரத்தினை இழந்த குடும்பங்களுக்கு தேவைக்கேற்றவாறு இலவசமாக வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.