• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்
- டயில் (Tile) மற்றும் துப்பரவேற்பாட்டு செரமிக் துணைக்கருவிகளை இறக்குமதி செய்வதற்காக அறவிடப்படும் செஸ் வரியினை திருத்துவதற்காக 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் வௌியிடப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகள் 2021‑03‑15 ஆம் திகதியிடப்பட்டதும் 2219/15 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.