• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம்
- இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலத்தை வரைவதற்கு 2020 ஒக்றோபர் மாதம் 26 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் இசைவாக்கமும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன்பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.