• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடமத்திய மாகாணத்தின் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் சேதன பசளை உற்பத்திக்கான முன்னோடி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- கமத்தொழிலின் போது இரசாயன பசளை பாவனையை தடைசெய்வதற்கு அரசாங்கத்தினால் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையினால் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் பெரும்போகம் ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் சேதன பசளை உற்பத்தியினை அதிகரித்து போதுமான விநியோகத்திற்கு பொருத்தமான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது அத்தியாவசியமாகியுள்ளது. இதற்கிணங்க, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நிதியிலிருந்து அத்தியாவசிய ஆரம்ப மூலதனத்தைப் பெற்றுக் கொண்டு சேதன பசளை உற்பத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் சேதன பசளையினை கமத்தொழில் அமைச்சினால் கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கும் இயலுமாகும் வகையில் கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. கமத்தொழில் பரவலாக மேற்கொள்ளப்படும் அநுராதபுரம் மற்றும் பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் 29 பிரதேச செயலாளர் பிரிவுகள் தழுவப்படும் விதத்தில் தேவையான மூலபொருட்களை இந்த பிரதேசங்களிலிருந்தே பெற்றுக் கொண்டு ஒரு பிரிவிற்கு ஆகக்குறைந்தது சேதன பசளை உற்பத்தி நிலையமொன்றைத் தாபித்து உத்தேச முன்னோடி கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.