• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முழுநாட்டையும் தழுவும் விதத்தில் பிரதேச செயலாளர் பிரிவு மட்டங்களில் கைத்தொழில்களை நிலைப்படுத்தும் மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்
- அபிவிருத்தியின் போது பிராந்திய ரீதியிலான சமமின்மையை குறைத்தல், கிராமிய வளங்களிலிருந்து உச்ச பயனைப் பெறுதல் மற்றும் கிராமிய பிரதேசங்களில் தொழில்களை உருவாக்குவதற்கு முன்வரும் கைத்தொழில் துறைசார்ந்த தொழில்முயற்சியாளர்களை ஊக்குவித்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு கைத்தொழில் அமைச்சும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்து வதற்கு திட்டமிட்டுள்ளன. இதன்கீழ் முக்கியமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல், இதன்மூலம் கிராமிய ரீதியில் பலமிக்க வர்த்தக வலையமைப்பினை உருவாக்கி தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பிரதேசவாரியாக பரந்துள்ள வளங்கல் / மூலப் பொருட்களை பயன்படுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு மற்றும் இறக்குமதி பதிலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆகக்குறைந்தது அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கருத்திட்டமொன்று வீதம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆகக்குறைந்தது 100 மில்லியன் ரூபா முதலீடொன்றை செய்யும் அத்துடன் 50 தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் கைத்தொழில்களை/ வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கு அத்துடன் செயற்பாட்டிலுள்ள கைத்தொழிலை / வர்த்தகத்தை மேம்படுத்தும் தொழில்முயற்சியாளர்களை / முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான சலுகைகளையும் வசதிகளையும் ஏற்பாடு செய்யும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினாலும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.