• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் வௌிநாட்டு பல்கலைக்கழகங் களுக்கும் இடையில் கல்விசார் ஒத்துழைப்பினை நோக்கமாகக் கொண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளல்
- அரசாங்க கொள்கை கட்டமைப்பிற்கு அமைவாக நாட்டின் பல்கலைக்கழகங்களை உலக தரப்படுத்தலில் உயர் நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு வௌிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கல்விசார் ஒத்துழைப்பினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் பின்வரும் புரிந்துணர்வு உடன்படிக்கை களைச் செய்து கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் இந்தியாவின் மனிபால் உயர்கல்வி கல்லூரியின் மனிபால் வாழ்க்கை விஞ்ஞான பீடத்திற்கும் இடையில் கூட்டு ஒத்துழைப்புச் செயற்பாடுகள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

* பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கும் வலய ஒத்துழைப்பிற்கான தெற்காசிய நாடுகளின் சங்கத்தின் கமத்தொழில் நிலையத்திற்கும் இடையில் கூட்டு ஒத்துழைப்புச் செயற்பாடுகள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

* கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் மலேசியாவின் மலயா பல்கலைக் கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

* இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அவுஸ்திரேலியாவின் மூன்றாம் நிலைக் கல்வி தரம் மற்றும் நியமங்கள் முகவராண்மைக்கும் (Tertiary Education Quality and Standards Agency) இடையில் தகவல் பரிமாறல், தர உறுதிப்படுத்தல் சம்பந்தமான ஒத்துழைப்பு மற்றும் தாபனங்களின் வலையமைப்பாக்கம் என்பன தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

* பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடத்தின் கமத்தொழில் விரிவாக்கல் கல்விப் பிரிவிற்கும் கனடாவின் அல்பர்ட்டா பல்கலைக்கழ கத்தின் விரிவாக்கல் பீடத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.